2009/12/30

பூ

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான இடுகை)


அழிந்துபோகாத பல வண்ணங்களைக்
கொண்டிருப்பவன் நான்.
மொட்டுகளாய் மொட்டவிழ்ந்ததுமாய்
பல பூக்களையும் சுமந்து
கொண்டிருப்பவன் நான்.
உயிருள்ள பூக்களுக்கிடையே
கண்காட்சியில் எனக்கும்
இடம் உண்டெனினும் சூட்டிக்கொள்ள
விரும்புவதில்லை எவரும்.
ஆசைக்கேனும் பறிக்க எண்ணமற்று
விலகிச்செல்கிறது விரல்கள்.
இசைந்து வரும் காற்றுக்கு
எவ்வளவு
தலையசைத்தும்
மொட்டவிழ்க்கத்தெரியாத என்னிடம்
கலவி கொள்ள முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கிறது
ஒரு வண்டு.

13 comments:

 1. கடைசி சில வரிகள் அருமை

  ReplyDelete
 2. அருமையான கவிதை
  நல்ல வரிகள்
  நடையும் சிறப்பாக உள்ளது.
  பாராட்டுகள்
  வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. ------ மிக்க நன்றி ரமணன்

  ------மிக்க நன்றி தியா

  ReplyDelete
 4. அழகான ஆழமான வரிகள்
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஆழ்ந்த சோகம் உங்கள் பூவுக்குள்.... வார்த்தைப்ப்ரயோகம் அருமை.... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அழகான கவிதை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்
  http://niroodai.blogspot.com
  http://fmalikka.blogspot.com

  ReplyDelete
 7. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 8. நன்றி மலிக்கா, thenammailakshmanan

  ReplyDelete
 9. அருமை.. ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 10. மொட்டை அவிழ்க்க வேண்டாம் தானே அவிழும் ...தெரியாது அவிழும் ...வண்டுகள் மொய்க்கும்..
  காத்திருத்தல் பலம்
  வாழ்த்துக்கள்
  பத்மா

  ReplyDelete
 11. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 12. நன்றி கௌரிப்பிரியா, பத்மா, சக்தியின் மனம்...

  ReplyDelete