இது கேணியில் நடக்கும் மூன்றாம் சந்திப்பு.
முதல் சந்திப்பில் எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டாம் சந்திப்பில் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் கலந்து கொண்டனர். திரு. பாலு மகேந்திரா எழுத்திற்கும் சினிமாவிற்கும் சொந்தக்காரர் என்பதால் "இலக்கியமும் சினிமாவும்" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் துவங்கியது.
திரு. பாலு மகேந்திராவின் பேச்சிலிருந்து...
தன் பயிற்சிப்பள்ளியல் பயில வரும் ஒவ்வொரு இளைஞர்களிடமும் தான் கேட்கும் முதல் கேள்வி
" கடைசியாக நீங்கள் வாசித்த சிறுகதை என்ன ? " என்பதிலிருந்தே சினிமாவும் இலக்கியமும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது.
எழுத்தும் சினிமாவும் இரு பெரும் ஊடகங்களாக விளங்குகிறது. எந்த வடிவத்தின் (எழுத்து, ஓவியம், சினிமா...) படைப்புடனும் இரு விஷயங்கள் கண்டிப்பாக அமைந்திருக்கும். ஒன்று உருவம் (Form) இன்னொன்று உள்ளடக்கம் (Content). உள்ளடக்கம் என்பது ஒரு படைப்பின் பொருள், உருவம் என்பது படைக்கப்பட்ட விதம்/வடிவம். உதாரணமாக சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் ஓவியம் மற்றும் அந்த ஓவியம் வரையப்பட்ட விதம். ஒரு அற்புதமான உள்ளடக்கமும் உருவமும் பிண்ணி பிணைக்கப்பட்டு காலத்தால் அழியாது பாதுகாகப்படுமேயானால் அதுவே ஒரு உன்னதமான படைப்பு - A Masterpiece. (உ.ம். "பாட்டி வடை சுட்ட" கதை போல).
The work of a Master need not be a Masterpiece everytime.
ஒரு எழுத்தை சினிமாவாக ஊடக மாற்றம் செய்ய விளையும் பொது அந்த எழுத்தில் உள்ள அனைத்தையும் எடுத்து செல்லுதல் முடியாத ஒன்றாகும். எழுத்திற்கு உள்ள நடையும்/மொழியும் சினிமாவிற்கு உள்ள மொழியும் வேறுபட்ட ஒன்று. இதுவே சினிமாவிற்கு ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. ஊடக மாற்றத்தின் பொழுது சில நேரங்களில் மொழியின் நடை/பயன்பாடு மாறுபடலாம். சில நேரங்களில் எழுத்தால் விவரிக்க முடியாததை சினிமாவில் விவரிக்க முடியலாம்.
ஒரு எழுத்தாளனை எழுதத் தூண்டிய/பாதித்த விஷயம், ஒரு இயக்குனரையும்/படைப்பாளனையும் பாதித்திருந்தால்
திரு. மாலன் அவர்களின் "தப்புக்கணக்கு" என்னும் சிறுகதையை தான் ஊடக மாற்றம் செய்ய விளைந்ததையும் அந்த சிறுகதையை திரு. ஞானி மூலம் வாசிக்கக் கேட்டு பெற்றுக்கொண்டோம். பின் அந்த சிறுகதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தான் குறும்படமாக மாற்றிய அனுபவத்தையும் விளக்கினார்.
பின், திரு. பாலு மகேந்திராவுடன் எங்களின் கலந்துரையாடல் துவங்கி, அதன் முடிவில் திரு. மாலனின் சிறுகதையைத் தழுவி தான் படைத்த "தப்புக்கணக்கு" குறும்படம்திரையிடப்பட்டது. அதன் முடிவில், திரு. மாலனின் எழுத்தை தான் கையாண்டவிதமும் மாற்றி அமைத்த வடிவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
தனது பேச்சின் பொழுது சினிமாவில் "திரைக்கதைஎழுத்தாளர்களின்" (The Absence of Movie Script Writer's) இல்லாமையைக் கருதி பெரிதும் கவலை கொண்டு இன்றைய இளைஞர்கள் திரைக்கதை எழுத்தாளர்களாகவும் (Film Script Writing) உருவாக வேண்டும் என்னும் தனது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டார்.
நானும் கேணி சந்திப்பிற்கு போயிருந்தேன். நானும் என்னோட பதிவில் கேள்வி பதிலை எழுதவில்லை. இனிமேல்தான் எழுதவேண்டும்.
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க...
கிருஷ்ணபிரபு,
சென்னை.