அவர் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த இயற்கையான சூழல் தான் (மூடப்பட்டிருந்த கிணறும் அதன்மேல்சூழ்ந்திருந்த மரத் தோட்டமும்) இந்த "கேணி" இலக்கிய கூட்டம் உருவாவதற்கான மூலம். இந்த ஒரு அழகிய சூழலை இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கும் தளமாக பயன்படுத்தவும் எண்ணி அமைந்ததே இந்த "கேணி" என்பது திரு. ஞாநியின் கூற்று.
தொடக்கமாக எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை பற்றி பேசினார்.
நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய கூட்டம் இதுவென்பதால் "ஆர்வத்தை" பற்றி சொல்லவே வேண்டாம். கூடவே சொல்ல முடியாத சிறு தயக்கமும் இருந்து கொண்டு தான் இருந்தது.
திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை தனக்கேயுரிய நடையில் கதை சொல்ல ஆரம்பித்தார். புது
சுமார் இரண்டறை மணி நேரம் நீடித்த பிறகு (இடையில் நாவிற்கும் ருசியாக சுண்டலும் தேநீரும் சேர்ந்து), திரு. எஸ். ராமகிருஷ்ணன் வுடன் எங்களின் கலந்துரையாடலுடன் கூட்டம் சுமார் ஏழு மணியளவில் இனிதே முடிந்தது.
இது நிச்சயம் இன்றைய இளைய படைப்பாளிகள், வாசகர்கள் பயணிக்க வேண்டிய ஒரு தளமாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்று கிழமைகளில் இந்த கூட்டம் நடைபெறும். இன்னும் பல இளைஞர்கள் (இருபாலரும்) கலந்து கொண்டு தங்களின் இலக்கிய சிந்தனைகளை விரிவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
நன்றி...