வளைந்ததாக சில
கூராக சில
தட்டையாக சில என
இருபது ஊசிகள்
ஐந்து ரூபாய் என்றான்.
இப்படி எத்தனையோ இருபதுகள்
அவன் கைகளில்.
மழை பெய்யும் குடை
சில்லறை இழக்கும் பணப்பை
கை தூக்க தெரியும் கக்கம்
என நம் கிழிந்துபோன
அவமானங்களை தைத்து மறைக்கும்
அவன் ஊசி.
நெரிசலில் சிக்கி
இருக்க இடமல்லாது
கை உதிர்த்து எவன் காலுக்கடியிலோ
சிக்கிக் கொள்ளும் ஒரு ஊசி.
புகை வண்டியின் அடுத்த நிறுத்தத்திற்கான
பல கால்கள் நகர்ந்து செல்லும்
அவன் கைகள் தடவிக் கொண்டிருக்கும்
மீதமுள்ள கால்களை.
நன்றி: கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=418:2009-09-11-00-13-42&catid=2:poems&Itemid=88
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=418:2009-09-11-00-13-42&catid=2:poems&Itemid=88
விஷ்ணு,
ReplyDeleteநன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
அறிமுகப்படுத்திய நண்பர்கிருஷ்ணப்பிரபுவிற்கு நன்றி.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
அந்த வரிகள் ரொம்ப ஆழம், அந்த ஊசிகள் என் மனதையும் சேர்த்து தைத்துவிட்டன.
ReplyDelete